ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலையில் 04 பேர் கைது…

ஹக்மன பிரதேச சபை உறுப்பினர் கொலை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பெண்ணொருவர் உள்ளிட்ட நான்கு நபர்கள் மாத்தறை குற்றவியல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கடந்த நவம்பர் நான்காம் திகதி ஹக்மன, கெம்பிலியபொல’வில் வைத்து குறித்த பிரதேச சபை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டு பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த சந்தேக நபர்கள் இன்று(11) தெய்யந்தர நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.