
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு இன்றைய(12) பாராளுமன்ற அமர்விலிருந்து வெளிநடப்பு…
பாராளுமன்றம் இன்று(12) பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.
இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்றைய பாராளுமன்ற அமர்வை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய பாராளுமன்றத்தை கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பொதுமக்களின் கூடம் மற்றும் விசேட அதிதிகளின் கூடம், ஆகியன இன்றைய தினமும் மூடப்படவுள்ளதாக பாராளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்துடன், இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.