காலநிலையானது, மீனவ சமூகத்திற்கு எச்சரிக்கை..

தென் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக காணப்படும் குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 48 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து வடக்கு – வடமேற்கு திசையில் தமிழ்நாடு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் கராணமாக மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40Km வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.