யாழ். பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே மோதல்…

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களிடையே நேற்று(11) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோதலில், தாக்குதலுக்கு இலக்கான மாணவர்கள் மூவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களே, அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் தமக்கு மரியாதை தருவதில்லை என்ற காரணத்தை முன்வைத்தே, அவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.