கிரிபத்கொட – சப்புகஸ்கந்த, கல்வல வீதியில், மோட்டார் சைக்கிளில் வந்து இனந்தெரியாத நபர்கள் இருவர் நேற்று(12) மாலை மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 35 வயதான வர்த்தகரொருவர் பலியாகிய நிலையில், அவர் வட்டிக்கு பணம் வழங்கும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் T-56 எனும் துப்பாக்கியினால் குறித்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டுள்ளதாக முதல் கட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.