இறுதித் தீர்ப்பு இன்று(13)..- உச்ச நீதிமன்ற தொகுதிக்கு பலத்த பாதுகாப்பு…

ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் இறுதித் தீர்ப்பு இன்று(13) வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் அமைந்துள்ள புதுக்கடை நீதிமன்ற தொகுதியில் பாரிய பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், கலகம் அடக்கும் குழுவினரும் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரம் 4 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்ற வழக்கு விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு நிறைவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.