ஜனாதிபதி மற்றும் ரணில் இடையே நேரடி சந்திப்பு…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நேற்று(13) இரவு சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பானது வெறும் 12நிமிடங்களே தொடர்ந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற கலைப்பு தொடர்பில் ஜனாதிபதினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்த நிலையிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.