மீனவ சமூகத்திற்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் கோரிக்கை…

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நேற்று(13) காலை 05.30 மணிக்கு திருகோணமலைக்கு கிழக்கு- தென்கிழக்காக அண்ணளவாக 850Km தூரத்தில் வட அகலாங்கு 6.5N, கிழக்கு நெடுங்கோடு 88.7 E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தமைக்கு அமைய குறித்த தாழமுக்கமானது விருத்தியடைய சாத்தியம் நிலவுவதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தாழமுக்கமானது, வடக்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து ஒரு ஆழமான தாழமுக்கமாக விருத்தியடைவதுடன் தொடர்ந்து வரும் 24 மணித்தியாலங்களில் ஒரு சூறாவளியாக உருவாகக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் இவ்விடயம் தொடர்பாகவும் வளிமண்டலவியல் ஆராய்ச்சி திணைக்களத்தால் வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.