அண்மையில் பேருவளை – பலபிட்டிய கடற்கரையில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் தொகையுடனான இழுவைப் படகின் உரிமையாளர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று(14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பேருவளை – பலப்பிட்டிய கடற்பரப்பில் வைத்து 2778 மில்லியன் ரூபா பெறுமதியான 231 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் அண்மையில் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏனைய இரண்டு சந்தேகத்துக்குரியவர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகிறது.