உலகின் மிகப்பெரிய விமானம் மத்தள விமான நிலையத்தில்…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய விமானமான என்டநொவ் 124 ரக சரக்கு விமானம் ஒன்று அவசரமாக மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்லாந்தில் இருந்து உகண்டா நோக்கி பயணித்த குறித்த விமானம் நேற்று அதிகாலை 5.26 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதுடன், கோளாறுகள் சரி செய்யப்பட்டு இன்று காலை 10.26 மணியளவில் மீண்டும் உகண்டா நோக்கி விமானம் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.