இந்தியாவுடன் ஆடி முடிந்து தான் எனக்கு ஓய்வு – மிஸ்பா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கெப்டன் மிஸ்பா உல்-ஹக், ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். டெஸ்டிலும் அவர் விடைபெறும் காலத்தை நெருங்கி விட்டார். இது தொடர்பாக 41 வயதான மிஸ்பா உல்-ஹக் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறுகையில்;

எனக்கு இன்னும் சிறிது காலமே கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கான முழு கவனத்தையும் செலுத்துவதற்கு முன்பாக மேலும் சில டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். ஆனால் இது மட்டும் எனது திட்டமல்ல. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டால், அதில் விளையாடி விட்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன். எனவே இந்திய தொடர் என்பது கடைசி போட்டியாக இருக்கும்.

இவ்வாறு மிஸ்பா உல்-ஹக் கூறினார்

(riz)