அதிவேக வீதியில் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு…

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்ப்பார்ப்பதாக அதிவேக நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் நாளொன்றுக்கு 70 ஆயிரம் என்ற அளவில் வாகனங்கள் பயணிக்கின்றதுடன், பண்டிகைக் காலங்களில் அந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பண்டிகை காலத்தின்போது தாமதமின்றி போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

பேருந்துகளின் பயண சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின், அதிகாரி ஏ.எச்.பண்டுக்க தெரிவித்துள்ளார்.