எதிர்வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபாவாகும். ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபாவாகும் என்று சபை தெரிவித்துள்ளது.