போதையில் உள்ள சாரதிகளை கைது செய்ய விசேட நடவடிக்கை…

நாடளாவிய ரீதியாக, பண்டிகைக் காலங்களில் மது அருந்திவிட்டு வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் பாதுகாப்பு மற்றும் வாகனப் போக்குவரத்துக்களைக் கட்டுபடுத்துவதற்காக 2000 பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளுடன் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.