‘Graphology’ எனப்படும் அறிவியல் சார்ந்த கையெழுத்துப் பகுப்பாய்வுமுறை ஒருவரின் கையெழுத்தைக் கொண்டே அவரின் தனித் தன்மையைத் தெரிந்து கொள்ள உதவுகிறது. அந்த ஆய்வு முறை அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்றும் கூட Graphology பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. குற்ற விசாரணைகளில் தொடங்கி, ஆரோக்கியத்தைப் பற்றி புரிந்து கொள்வது வரை வெவ்வேறு அம்சங்களில் Graphology உதவுகிறது.
முதலாளிகள் சிலர் கையெழுத்துப் பகுப்பாய்வைப் பயன்படுத்தி ஆற்றல் மிக்க ஊழியர்களைத் தேர்ந்தெடுப்பர்.
ஒருவரின் கையெழுத்தை ஆய்வு செய்வதன் மூலம் அவரிடமுள்ள 5000க்கும் மேற்பட்ட தனித்தன்மைக் கூறுகளைக் கண்டுபிடிக்க முடியும் என கையெழுத்து நிபுணரான Kathi McKnight தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.