இலங்கையின் நிலையான நண்பன் என்ற வகையில் இலங்கையில் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிக்கு அரசியல் யாப்புக்கு அமைவாக ஜனநாயக ரீதியில் தீர்வுகாணப்பட்டதை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கையினது ஜனநாயக நிறுவனங்களின் மீளெழுதலை போற்றுவதுடன், இலங்கையினது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் அதன் செழிப்பிற்குமான முயற்சிகளுக்கும் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் எனவும் இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதரகம் இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளது.