பாராளுமன்றத்தில் வாயுக் கசிவு..? தீப்பரவல் பயத்தில் ஊழியர்கள் வெளியேற்றம்…

பாராளுமன்ற உறுப்பினர்களது உணவகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதாக பரவிய செய்தியினைத் தெரிவித்து அங்குள்ள ஊழியர்கள் பாராளுமன்ற வளாகத்தில் இருந்து சற்றுமுன்னர் வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், இவ்வாறு சமையல் எரிவாயு கசிவோ அல்லதி ஏனைய வாயுக் கசிவுகளோ ஏற்பட்டுள்ளதா என இதுவரையில் நிச்சயிக்கப்படவில்லை என்பதோடு, பாராளுமன்ற பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது