ஐ.தே.கட்சியில் வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமல்ல விஷத் தேனீக்களும் உள்ளன…

ஐக்கிய தேசியக் கட்சியில் வண்ணத்துப் பூச்சிகள் மட்டுமல்ல விஷத் தேனீக்களும் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடலில் தற்போது ஆரம்பமான பேரணியில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நாமே ஜனாதிபதியை தெரிவு செய்தோம். எனவே அவரை எது வேண்டுமானாலும் சொல்ல எமக்கு உரிமையுள்ளது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.