புதிய அமைச்சரவை குழுவானது இன்றைய தினத்தில்(18) நியமிக்கப்படுவது நிச்சயமற்றது என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவானது ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அமைச்சரவை குழுவில் 32 பேர் பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,
எவ்வாறாயினும், அரசியலமைப்பிற்கு அமைய அரசுக்கு அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் மாத்திரமே நியமிக்கப்பட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.