நாட்டில் காணப்படும் வறட்சியான காலநிலையில் டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.