சீதுவ – பெலியத்த பகுதிகளில் துப்பாக்கிச் சூடு…

சீதுவ மற்றும் பெலியத்த பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பெலியத்த – கெட்டமான்ன பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார்சைக்கிளில் வந்த இருவர் நேற்றிரவு துப்பாக்கிச்சூடு மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பெலியத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, சீதுவ – லியனகேமுல்ல பகுதியில் இன்று(19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சீதுவ – ரந்தொலுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.