ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று(18) கூடியது.
இதன்போது, ஆளுங்கட்சியில் இணைந்துக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க போவதில்லை என்று ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஸ்ரீ லங்கா சுத்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அனுமதி கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.