மிஹின் லங்கா விமான சேவை மற்றும் ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை, வரையறுக்கப்பட்ட ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனம் ஆகியவற்றில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம், 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டதுடன், அதன் கால எல்லை இம் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவுப்பெறவுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே இந்த ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆணைக்குழு உறுப்பினர்களை இன்று(19) முற்பகல், ஜனாதிபதி செயலகத்துக்கு அழைத்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,விசாரணைகளில் முன்னேற்றங்கள் தொடர்பில் கேட்டறிந்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.