உதடுகள் வறண்டு, கருப்பா இருக்கா?

சிலருக்கு உதடுகள் கருமையாக அல்லது உதடுகள் வறண்டு இருக்கும் உதட்டை இயற்கை முறையில் அழகாக மாற்றுவது எப்படி என்று பார்க்கலாம்.

* கொத்துமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.

* தேங்காய் எண்ணெயில் அரை டீஸ்பூன் சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.

* பீட்ரூட் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும். மாதுளம் பழத்தின் சாறும் உதடுகளை அழகாக்கும்.

* பெட்ரோலியம் ஜெல்லி உதடுகளை மென்மையாக்க உதவும் மிக சிறந்த பொருளாகும். தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும்.

* வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.

* உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்படவேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும். எனவே இது தவிர்க்கப்பட வேண்டும்.