இடைக்கால கணக்கு அறிக்கை பாராளுமன்றில் நிறைவேற்றம்..

2019ம் ஆண்டுக்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்த எதிர்வரும் 04 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை 102 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த கணக்கறிக்கைக்கு எதிராக 06 வாக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியானது குறித்த இடைக்கால கணக்கு அறிக்கைக்கு எதிராகவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வாக்களிப்பில் இருந்து தவிர்ந்தும் இருந்தனர்.

மேலும், பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ம் திகதி மதியம் 01.00 மணி வரை  ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.