ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவியேற்ற பின்னர் புதிய அரசாங்கத்திற்கான இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சு பதவிகள் இன்று(21) வழங்கப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி புதிதாக பதவியேற்ற அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள்:
அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள்
ஹர்ஷ டி சில்வா – பொருளாதார சீர்திருத்தம் மற்றும் பொது விநியோக அமைச்சர்
சுஜிவ சேனசிங்க – விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் ஆராய்சி அமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
ரஞ்சன் ராமநாயக்க – நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஜே. சி. அலவத்துவள – உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
எரான் விக்ரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்
அலி சாஹிர் மௌலானா – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
ருவன் விஜேவர்தன – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
விஜயகலா மகேஸ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சர்
பைசல் காசிம் – சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
அமீர் அலி – விவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ரஞ்சித் அலுவிகார – சுற்றுலா அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
வசந்த அலுவிகார – விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் கிராம பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
லக்கி ஜயவர்தன – நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர்
சம்பிக்க பிரேமதாச – சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இராஜாங்க அமைச்சர்
அசோக்க அபேசிங்க – போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்
எச்.எம்.எம். ஹரிஸ் – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்
திலிப் வேதாராச்சி – மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
ஏ.இசட்.எம் ஷயீட் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர்
வடிவேல் சுரேஷ் – பெருந்தோட்டம் இராஜாங்க அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
புத்திக பத்திரண – தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர்
நளின் பண்டார – சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர்
அனோமா கமகே – பெட்ரோலிய வளங்கள் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
எட்வர்ட் குணசேகர – காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர்
அஜித் மன்னப்பெரும – சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர்
கரு பரணவிதான – தொழிற்பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி பிரதி அமைச்சர்
பாலித்த தெவரப்பெரும – சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர்