நேபாளத்தில் கல்வி சுற்றுலா சென்ற மாணவர்கள் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மலைப் பாதையில் ராம்ரி கிராமம் அருகே வந்தபோது பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து 1,640 அடி பள்ளத்தாக்கில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த 23 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் மாணவர்களும்- கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.