சாரதிகளிடம் வீதிப் பாதுகாப்பு அதிகார சபை கோரிக்கை…

தெற்கு அதிவேக வீதியில் வாகனப் போக்குவரத்தின் போது அவதானத்துடன் இருக்குமாறு வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது. 

ஆண்டின் இறுதிப் பகுதி என்பதால் அதிவேக வீதியில் அதிகளவான வாகனங்கள் பயணிப்பதாகவும், இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனால் வீதி விபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்காக சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு வீதிப் பாதுகாப்பு அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.