பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…

அரசாங்கத்தின் வரிச் சலுகையை அடுத்து, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. 

புத்தாண்டை முன்னிட்டு, சந்தையில் கணிசமான அத்தியாவசியப் பொருட்கள் இருப்பதாக புறக்கோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளாந்தம் பாரிய வாகனங்களில் பல மாகாணங்களில் இருந்தும் அத்தியாவசியப் பொருட்கள் சந்தைக்கு வருவதாக இவர்கள் கூறுகின்றனர்.

சதொச வலைப்பின்னலுக்கு உட்பட்ட 403 கிளைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என சதொச நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.