நோய் எதிர்ப்பு நிவாரண மருந்துப் பொருட்களை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நோய் எதிர்ப்பு நிவாரணிகளின் முறையான பயன்பாடு தொடர்பாக கொழும்பில் இடம்பெற்ற செயலமர்வின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் இந்த பழக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரட்ன, இலங்கையில் இந்த துஷ்பிரயோக செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கு உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சு முன்னெடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.