ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் ஒருவர் கைது…

ஒரு கிலோ கிராம் ஹெரோயின் தொகையுடன் மாரவில – தெமட்டிபிட்டிய பிரதேசத்தில் நேற்றிரவு(23) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபரிடமிருந்து, சுமார் ஒரு கோடியே 20 லட்சம் பெறுமதியான ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

லுனுவில பகுதியை சேர்ந்த 28 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.