அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிகழ்ச்சி நிரல் திட்டத்தின்கீழ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக செயற்படுகிறார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
தொடர்ந்து கூறுகையில்; ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பிலான மனித உரிமை நிலவர அறிக்கையின் முன்னரே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தேர்தல் திகதி ஓகஸ்ட்டில் குறிக்கப்பட்டது.
இந்நிலையில் வெளியாகவுள்ள ஐக்கிய நாடுகளின் அறிக்கை நாட்டுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை நோர்வேயின் முன்னாள் சமாதான தூதர் எரிக்சொல்ஹெய்மும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என்று அழகப்பெரும மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(riz)