கடந்த இரு தினங்களில் இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் 548 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வாகன விபத்து காரணமாக 163 பேர் இந்த காலப்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது நூற்றுக்கு 18 சதவீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பட்டாசு விபத்துத்துக்களில் அனர்த்தத்துக்கு உள்ளானவர்கள் எவரும் இக்காலப்பகுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.