வடக்கில் வெள்ளம் காரணமாக சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை…

வடமாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 5 மாவட்டங்களில் 75 000 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகள் சொத்துக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக அரச நிர்வாகம் மற்றும் இடர்முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மதுத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலக்கில் இன்று(26) காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்காக மாவட்டசெயலாளரகள், பிரதேச செயலாளர்கள் மூலம் சேதவிபர ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

வடமாகாணத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மக்களுக்கு சமைத்த உணவு, உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். பொலிஸாரும் முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.