கிராண்பாஸ் , ஹேனமுல்ல பிரதேசத்தில் நேற்று(26) இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்தனர்.
சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான புளூமெண்டல் சங்க என்பவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.