தலவாக்கலை ரயில் நிலையத்திற்கும் நானுஓயா ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், இன்று(27) காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
அப்பகுதியில் சென்ற பாதசாரதிகள், சடலமொன்று கிடப்பதை கண்டு தலவாக்கலை பொலிசாருக்கு அறிவித்துள்ள நிலையில், குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும், சுமார் 65 -70 வயதிற்கும் இடைப்பட்டவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.