சுற்றுலா பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் விசேட அறிவுறுத்தல்…

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாக்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

காட்டு யானைகளை புகைப்படங்களை எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.