கூந்தல் வளர்ச்சிக்கும் சாப்பிடும் உணவிற்கும் தொடர்பு இருக்கிறது. வலுவான, நீளமான கூந்தலை பெறுவதற்கு ஒருசிலவகை உணவு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கூந்தல் ஆரோக்கியத்திற்கு புரதம் அவசியமானது. முட்டையில் புரதம் அதிகம் நிறைந்திருக்கிறது. அது கூந்தல் அடர்த்தியாக வளர்வதற்கு தூண்டுகோலாகவும் விளங்குகிறது.
தினமும் ஒரு எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு பருகுவதும் நல்லது. அதில் இருக்கும் விட்டமின் சி, ஜொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது. அது தலைமுடியை வலுவாக்க உதவும். கூந்தல் வளர்ச்சியையும் மேம்படும்.
முழுதானிய வகைகளில் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் பி போன்றவை நிறைந்திருக்கின்றன. மேலும் அதில் இருக்கும் பயோட்டினும் முடி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் கேரட் ஜூஸ் பருகுவதும் கூந்தல் வளர்ச்சிக்கு வித்திடும். அதில் இருக்கும் வைட்டமின் ஏ ரோமக்கால்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
அவகோடாவும் விட்டமின் ஈ நிரம்பப்பெற்றது. காலை உணவுடன் சாலட்டாக அதனை சாப்பிடலாம்.