கடந்த இரண்டு மாதங்களாக தென்கொரியாவை ஆட்டிப்படைத்து வந்த மெர்ஸ் எனும் வைரஸ் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுதலை பெற்றுவிட்டோம் என தென்கொரியா பிரதமர் அறிவித்துள்ளார்.
மெர்ஸ் என்ற கொடிய வைரஸ் நோய் தென்கொரியாவில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் பரவ தொடங்கியது. இந்நோய்க்கு மொத்தமாக 36 பேர் பலியானார்கள். 187 பேர் நேரடி நோய் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கருதப்பட்ட 17 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் ஜூலை 4-ம் திகதி முதல் புதிதாக யாறும் மெர்ஸ் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என அவ்வரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தென்கொரிய பிரதமர் ஹுவாங்க ஆன் பொது சுகாதாரம் தொடர்பான அரசாங்க கூட்டத்தில் உரையாற்றுகையில்; “அரசு மற்றும் சுகாதாரத்துறையின் கடும் முயற்சியின் விளைவாக மெர்ஸ் வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. இனி மக்கள் பதற்றப்படாமல் ஓய்வாக இருக்கலாம்” என தெரிவித்தார்.
(riz)