கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் இன்று(28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொடகவெல பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.