ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட டிக்கோயா போடைஸ் 30 ஏக்கர் தோட்ட பகுதியில் உள்ள 4 ஆம் இலக்க குடியிருப்பில் இன்று (29) காலை ஏற்பட்ட தீடீர் தீ விபத்து காரணமாக 24 குடியிருப்புகள் எரிந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லயன் குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் முற்றாக எரிந்துள்ளதுடன் குடியிருப்பில் இருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 24 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் போடைஸ் தமிழ் வித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கபட்டுள்ளதாகவும் அவர்களுக்கான உலர் உணவு பொருட்களை வழங்க தோட்ட நிர்வாகம் மற்றும் அம்பகமுவ பிரதேச காரியாலயம் முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.