வாகன சோதனைகளை மேலும் அதிகரிக்கத் திட்டம்…

மதுபோதையில் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் அதிகரிக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மதுபோதையில் வாகனங்களை செலுத்துகின்றவர்கள் கைது செய்யப்படுகின்ற நிலையில், வாகன சோதனைகளை மேலும் அதிகரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த செயற்பாடுகள் மூலம் விபத்துக்களை குறைக்கலாம் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.