தனது புதிய கட்சியினைக் கலைக்கவும் தயார் – விக்கி ஆவேசம்…

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட தனது புதிய அரசியல் கட்சியான ‘தமிழ் மக்கள் கூட்டணி’ இனைக் கலைத்து விட்டு வீட்டிற்கு செல்ல தயாராக இருப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடக செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்;

“தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இல்லை என்றால் தனது புதிய கட்சியை கலைத்து விட்டு வீடு செல்ல தயாராக இருக்கின்றேன்.

இந்நாட்டில் தமிழ் மக்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து செல்கின்றது. எங்கள் தேசிய அரசியல் பயணத்தில் நிச்சயமாக ஒரு மாற்றம் இல்லை என்றால், ஒரு பேரழிவை நான் முன்னோக்கி பார்க்கிறேன்.

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.