திருமணம் குறித்த கதை தொடர்பில் ரோஹித மனந்திறந்தார்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக சிங்கள மொழி செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ரோஹித ராஜபக்ஷ தத்யான ஜயரத்ன என்பவரே திருமணம் செய்துகொள்ள உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றதாகவும், குறித்த செய்தியினை முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த செய்தி பொய்யானது என ரோஹித ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.