எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்தில் போட்டியிடும் என குறித்த கட்சியின் கட்டுப்பாட்டு செயலாளர் ரேனுக பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும்.
ஆனால் இதன் மூலம் கூட்டணி அமைக்கும் செயற்பாட்டில் இருந்து பொதுஜன முன்னணி விலகி நிற்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.