வடக்கில் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில் கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று(03) வட பகுதிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் வடபகுதிக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இதேவேளை, மக்களுக்கான நிவாரணப்பணிகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.