சாவகச்சேரி பொதுச் சந்தையில் வாழைக் குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ்க்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்த நிலையில், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்றபோது குறித்த வியாபாரி தடை செய்யப்பட்ட மருந்தினை வாழைக்குலைக்கு விசிறிக் கொண்டு இருந்தபோதே பிடிபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.சாவகச்சேரி வாழைப் பழத்திற்கு பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.