ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா- பாலித தெவரப்பெரும இடையில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கடும் முரண்பாட்டு நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
சகோதர நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாட்டு நிலைமையினை சிலர் தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடும் எனவும் இதனால் உடனடியாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
இருவருக்கும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து கட்சித் தலைவரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சர் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.