தேவையான நேரத்தில் விக்கட்டுக்களை கைப்பற்றத் தவறி விட்டோம் – மாலிங்க ஆதங்கம்..

வேறுபாடுகளை கண்டறிந்து அடுத்த போட்டியிற்காக நாம் இதனை விட சிறப்பாக தயாராகவுள்ளதாக இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்று(03) இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் 45 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில் , பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

“.. தேவையான நேரத்தில் விக்கட்டுக்களை கைப்பற்றாமை போட்டியின் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் , இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவின் இணைப்பாட்டம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைகிறேன்…”