மீன் குழம்பும் மண்பானையும் மற்றும் பல்வேறு தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் எஸ்தர். இவரும், ‘நான் ஈ’ படத்தில் ஹீரோ நானியுடன் இணைந்து நடித்த நோயலும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
தங்களது காதலை பொதுவெளியில் வெளிப்படுத்தாமல் ரகசியம் பாதுகாத்ததுடன் நண்பர்கள்போல் பழகி வந்தனர்.
இதையடுத்து நேற்றுமுன்தினம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள தேவாலயத்தில் திடீர் திருமணம் செய்துகொண்டனர். திருமண விழாவுக்கு பிரபல நடிகர், நடிகைகள் யாரையும் அழைக்கவில்லை.
ஒரு சில நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். நோயல், எஸ்தர் தங்களது ரகசிய திருமண படத்தை இணைய தள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.
இதுபற்றி எஸ்தர்,’இனிமேல் நாங்கள் இருவர் அல்ல ஒன்றாகி ஒருவராகிவிட்டோம். இனி என்னுடைய இதயத்தை ஆளப்போகும் மன்னன் நோயல்தான்’ என குறிப்பிட்டுள்ளார்.



